சிவபுராணம்
திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
---------
முகவுரை
திருமுருகன் திருவருளாலும் பரமேட்டியின் பரந்த கருணையாலும் பாடிய இந்நூல் பற்றிக் கூறுமுன், என் கவி வளர்ச்சியைப் பற்றி இரண்டொரு சொல் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.
முதற்றகு நிலையில் வாசிக்கு முன்னரே, என் அரிய பெற்றோர் அவனி நீங்கினர். எனவே, குடும்ப பாரம் என் மேல் வீழ்ந்தது. நானே குடும்பத் தலைவனாக இருந்து கொண்டு மேலும் கற்க முயன்றேன். நான் நான்காவது ஐந்தாவது வகுப்புக்களில் வாசிக்கும் போதே கவிகள் பாடுவேன். ஆனால், அவை எந்த அழகின என்று எனக்கே தெரியாது! இரண்டாந் தகுநிலை வாசித்து, முழு ஆண்டுப் பரீட்சை எழுதினேன். விடைத் தாளின்மேல் திருத்தித் தேர்ச்சி எண் குறித்த ஆசிரியர், ”நீ தமிழை நன்றாகப் படித்தால், சிறந்த ஒரு தமிழ்ப் ஆசியன் ஆனாழை நல்ல கசகப் படம் இல்லை என்று எழுதி வகுப்பில் வாசித்துக் காட்டினார். அவர் உயர். திரு மாதவ ராவ் எனபவர். இன்றும் கோவையில் தான் வசித்து வருகிறார்.
மூன்றாந் தகுநிலை கற்கும் போது, ஒரு நாடக நூல் எழுதி னேன். தமிழாசிரியர் அதைப் பார்வையிட்டு, “பாடல்கள் சொல்லும் பொருளும் சுவை குறையாமல், இலக்கண அமைதியுடன் இயற்கையில் அமைந்துள்ளன” என்று கூறினார். அந்நூல் அச்சேற்றிப் பிரசுரிக்கப்பட்டது. நான்காந் தகுநிலையில் இரண்டு துப்பறியும் நாவல்கள் எழுதினேன். அண்மையில், அக்கதைகளை பத்திரிக்கைகள் பிரசுரம் செய்தன. ஐந்தாம் தகு நிலையில் தேர்ச்சியுறாமையின், மனச்சோர்வடைந்து பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டேன்.
2
மூன்று நான்கு தகு நிலைகளில் கற்கும் போது, கீர்த்தனங்கள், தனிப்பாடல்கள், வெண்பாச் சிலேடைகள், பந்தனக் கவிகள், அனாசிக நீரோட்டகம் முதலிய எல்லா விதமான பாடல்களும் பாடியுள்ளேன். கண்ணுற்ற புலவர்கள், ‘உன் பாடல்கள் இலக்கண அமைதியுடன் அமைந்துள்ளன. ஆனால் நீ இலக்கணம் படித்தவன் அல்லவே என்று புகழ்ந்து பேசுவதுண்டு.
பள்ளிப் படிப்பு முடித்தபின், மனச்சோர்வுடன் பொருளா தாரமும் சீர் குலைந்தது. ஓராண்டு முடிவதற்குள், சினிமாக் கம்பெனி, பேங்கு, நகராண்மைக் கழகம், ஆகிய மூன்று இடங்களிலும் குமஸ்தா வேலையில், குறுகிய வட்டமிட்டேன். இரண்டு ஆண்டுகள், பத்திரிக்கையில் பணி ஆற்றினேன். இரண்டு ஆண்டுகளில், போதனா முறை முடித்து ஐயர் கிரேடு ஆசிரியர் ஆனேன்.
மாணவத்தன்மையிலும், பின்னரும், தமிழ்நூல்களைப் படித் துக்கொண்டுதானிருந்தேன். ஆசிரியனானபின், நன்றாகக் கற்க ஆரம்பித்து வித்வான் பரீக்ஷைகளில் ஒவ்வொன்றாகத் தேர்ச்சி பெற்றேன். இதற்கிடையே, சோதிடமும் சிறிது பயின் றேன். தமிழோ, மற்றக் கலைகளோ, எந்த ஆசிரியரிடமும் பாடங்கேட்டுப் படிக்கவில்லை. நானாக வெகு சிரமத்துடன் முயன்றுதான் படித்தேன். குடும்பம் இடும்பையுற்ற தாலும் பள்ளிப் படிப்பைத் தள்ளி விட்டமையாலும், நான் என் உயிரையும் வெறுத்ததுண்டு. ஆனால் தமிழைக்கற்க வேண்டும் என் னும் ஒரு ஆசையே, என்னை உயிர் வாழச் செய்தது. எத்தனையோ முட்டுக்கட்டைகள்! அத்தனை யிடர்ப்பாட்டிடையே நான் தமிழ் படித்த வரலாற்றை, ஒரு கற்பதுமையிடம் கூறி னாலும், அது கரைந்தமும் என்றால் புதுமையானதுதான்! தமிழைக் கற்பதிலும், ஆண்டவனை வழிபடுவதிலும், நான் கண்ட இன்பம் வேறு எதிலும் கண்டதில்லை.
பழம்புலவர்களின் பாடல்களைப் படித்த நான், சொந்தக் கவிகள் சொல்வதில் வெறுப்புற்றேன். அருமையான பழம் பாடல்கள் ஏராளமாக இருக்க, வெறுமையான பாடல்கள் ஏன் பாட வேண்டுமென்பதே. ஏதாவது நல்ல கருத்துக் களைக் கொண்டன்றிப் பாடுவதில்லை என்று முடிவு செய்தேன்.
தமிழரின் பண்பாடு, நாகரீகம், மாறிவந்தது. தமிழரசர் ஆட்சி யமிழ்ந்து, ஆங்கில வாட்சி > ஆட்டமுற்று,சுயாட்சி நிலைசூழ்ந்தது. பழங்கால நாகரீகம்,விஞ்ஞான முறையில் வேறு பட்டது. இக்காரணங்களே, என்னை இக்கவிகள் பாடத் தூண்டின. 1948-ல், இரண்டே மாதங்களில், முருகன் திருவருளால் இம் முன்னூறு பாடல்களும் பாடினேன். இரு சொல் அலங்கரப் பாடல், ஒருவகையான சுவையுடையது. அப்பாடலால் பாட விரும்பி, ஏதோ எனது எளிய அறிவால் பாடியுள்ளேன். முற்காலத்தற்காலத் தமிழரின் பண்பாடு, இந்தியாவின் இயற்கையழகு, செயற்கைவளம், சரித்திரக் குறிப்பு, சான் றோர் வரலாறு, முதலியன சித்தரிக்கும். எனவே, அறிஞர் வாசித்துணர்ந்து, எனக்கு நல்லாசி கூறி வாழ்த்தி, என்னை ஊக்குவிப்பாராக.
இங்ஙனம்,
K.R. அரசப்பன்.