Sample

சென்னை: ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதல்வர் விஜயே ஏற்றுக் கொள்ளமாட்டார் என ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று முதல்வர் விஜய் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

முன்னுரை

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’, ‘பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’- இந்த இரண்டு தொடர்களும் நாலடியாரின் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் நன்கு காட்டுவன.

குறள் வெண்பாக்களால் ஆகிய நூலுக்குக் ‘குறள்’ என்ற பெயர் ஏற்பட்டாற்போல, நாலடி வெண்பாக்களாலாகிய இந்நூலிற்கும் ‘நாலடி’ என்னும் பெயர் அமைந்தது. ‘ஆர்’ விகுதி சேர, அது நாலடியார் ஆயிற்று. நாலடியார், நாலடி நானூறு, வேளாண் வேதம் எனவெல்லாம் இதனைக் குறிப்பிடுவார்கள்.

திருக்குறள், கருத்துக்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது; நாலடி, விளக்கமாகவும் இனிதாகவும் அனைவருக்கும் புலனாகுமாறும் எடுத்துச் சொல்லுகிறது. திருக்குறளின் விளக்கம்போல் இந்த நூல் போற்றப்பட வேண்டியதாகும். அதனைக் கற்பதற்குமுன் கற்கப்பட வேண்டிய அடிப்படை நூலுமாகும்.

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.

வடநாட்டிலே, ஒரு சமயம் பெரிய பஞ்சம் ஏற்பட, சமண முனிவர்கள் எண்ணாயிரவர் பாண்டிய நாட்டைத் தஞ்சமாக வந்து அடைந்தனர். தமிழ் நாட்டிலே தங்கிய அவர்கள் தம் உடலைப் பேணியதுடன், தமிழென்னும் அமுதையும் பருகித் தமிழ்ச் சான்றோராகவும் சிறந்தனர். வடநாட்டுப் பஞ்சம் நீங்கியதும், அவர்தம் நாடுதிரும்ப விரும்பவும், பாண்டியன் அவரைப் பிரிய மனமின்றி விடைகொடாது காலந் தாழ்த்தினன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடல் எழுதித் தம் காணிக்கையாகப் பாண்டியனுக்கும் தமிழுக்கும் வைத்துவிட்டு யாரும் அறியாதேயே, தம் நாடு சென்றுவிட்டனர்.

செய்தியறிந்த பாண்டியன் பெரிதும் வருத்தம் அடைந்தான். அந்த ஏடுகளை வையையிலே எறிய ஆணையிட்டான். அவற்றுள், வெள்ளத்தை எதிர்த்து வந்த ஏடுகள் 400. அவையே நாலடி நானூறாகத் தொகுக்கப் பெற்றன. போற்றிப் பேணப் பெற்றன.


இயல் பொருட்பால், பாடல் என் 131

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.

செய்யுள் விளக்கம்

பெண்ணே!
உன் கூந்தல் அழகும் 
வளைந்து தொங்கும் உன் சேலை 

முன்தானைக் கோடுகளின் அழகும்
நீ உடலில் பூசிக்கொள்ளளும் மஞ்சள் அழகும்
உனக்கு அழகு அல்ல. 

உன் நெஞ்சத்தில் 
“நான் நல்லவள்” என்னும் நடுவு நிலைமையோடு 
நீ பெற்றிருக்கும் கல்வி அழகுதான் உனக்கு அழகு.